கேரளாவின் பாலக்காட்டில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு


கேரளாவின் பாலக்காட்டில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
x

கேரளா மாநிலம் பாலக்காட்டில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாலக்காடு,

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓங்கலூர் பகுதி மக்கள், அப்பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு அருகில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். ஒவ்வொரு பெட்டியிலும் 200 குச்சிகள் என 40 பெட்டிகளில் சுமார் 8 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சோரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிபொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து சோரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது பஷீர் கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் இந்த வெடி பொருட்கள் குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த வெடிபொருட்களுடன் டெட்டனேட்டர்கள் கிடைக்கவில்லை.

இது பொதுவாக குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அதிக அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்று கூறினார்.


Next Story