லேசரால் வழிநடத்தப்படும் பீரங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள ராணுவ தளத்தில் இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது.
புதுடெல்லி,
லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய பீரங்கி தகர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அதை ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள ராணுவ தளத்தில் இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. 'அர்ஜுன்' பீரங்கியில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. அது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதன்மூலம் சோதனை வெற்றிகரமாக நடந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story