கடந்த மே மாதத்தில் மட்டும் மங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.


கடந்த மே மாதத்தில் மட்டும் மங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.
x

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரு;


மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும், அதனை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடக்கிறது.

இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம் குறித்து சுங்கவரித்துறையினர் செய்திகுறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

3½ கிலோ தங்கம் பறிமுதல்

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாய், சார்ஜா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி விமானங்கள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதன்படி கடந்த மே மாதத்தில் மட்டும் விமானம் மூலம் கடத்தியதாக மொத்தம் 3 கிலோ 640 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 87 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வரும் நாட்களில் தங்கம் கடத்தலை அறிய தீவிர சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story