முலாயம் சிங், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது..!!


முலாயம் சிங், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது..!!
x

குடியரசு தின விழாவை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களை மத்திய அரசு கவரவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த உத்திர பிரதேச முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம், 106 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.

விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விபரம்:-

பத்ம விபூஷன் (6)

1. முலாயம் சிங் யாதவ் (மரணத்திற்குப் பின்)

2. பால்கிருஷ்ண தோஷி (மரணத்திற்குப் பின்)

3. ஜாகீர் உசேன்

4. எஸ்.எம்.கிருஷ்ணா

5. திலீப் மஹாலனாபிஸ் (மரணத்திற்குப் பின்)

6. ஸ்ரீனிவாஸ் வரதன்

பத்ம பூஷன் (9)

எஸ்.எல் பைரப்பா

குமார் மங்கலம் பிர்லா

தீபக் தர்

வாணி ஜெய்ராம்

சுவாமி சின்ன ஜீயர்

சுமன் கல்யாண்பூர்

கபில் கபூர்

சுதா மூர்த்தி

கமலேஷ் டி படேல்

பத்ம ஸ்ரீ (91)

சுகமா ஆச்சார்யா, தையாபாய் பைகா, பிரேம்ஜித் பாரியா, உஷா பார்லே, முனீஸ்வர் சந்தாவார், ஹேமந்த் சவுகான், பானுபாய் சித்தாரா, ஹேமபிரோவா சூடியா

நரேந்திர சந்திர தேபர்மா (மரணத்திற்குப் பின்), சுபத்ரா தேவி, கதர் வல்லி தூதேகுல, ஹேம் சந்திர கோஸ்வாமி, பிரித்திகானா கோஸ்வாமி

ராதா சரண் குப்தா, மொடடுகு விஜய் குப்தா, அகமது ஹுசைன் & முகமது ஹுசைன் (இருவர்), தில்ஷாத் ஹுசைன், பிகு ராம்ஜி இடதே, சி ஐ ஐசக், ரத்தன் சிங் ஜக்கி

பிக்ரம் பகதூர் ஜமாத்தியா, ராம்குய்வாங்பே ஜீன், ராகேஷ் ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலா (மரணத்திற்குப் பின்), ரத்தன் சந்திர கர்

மஹிபத் கவி. எம் எம் கீரவாணி, அரீஸ் கம்பட்டா (மரணத்திற்குப் பின்), பரசுராம் கோமாஜி குனே, கணேஷ் நாகப்பா கிருஷ்ணராஜநகரா, மகுனி சரண் குவான்ர்

ஆனந்த் குமார், அரவிந்த் குமார், தோமர் சிங் குன்வர், ரைசிங்போர் குர்கலங், ஹிராபாய் லோபி, மூல்சந்த் லோதா, ராணி மச்சையா, அஜய் குமார் மாண்டவி

பிரபாகர் பானுதாஸ் மாண்டே, கஜானன் ஜகந்நாத் மானே, அந்தர்யாமி மிஸ்ரா, நாடோஜா பிண்டிபாப்பனஹள்ளி முனிவெங்கடப்பா

பேராசிரியர் (டாக்டர்) மகேந்திர பால், உமா சங்கர் பாண்டே, ரமேஷ் பர்மர் & சாந்தி பர்மர் (இரட்டையர்), நளினி பார்த்தசாரதி, ஹனுமந்த ராவ் பசுபுலேட்டி

ரமேஷ் பதங்கே, கிருஷ்ணா பட்டேல், கே கல்யாணசுந்தரம் பிள்ளை, வி பி அப்புக்குட்டன் பொடுவாள், கபில் தேவ் பிரசாத், எஸ் ஆர் டி பிரசாத்

ஷா ரஷீத் அகமது குவாட்ரி, சி வி ராஜு, பக்ஷி ராம், செருவயல் கே ராமன், சுஜாதா ராம்துரை, அப்பாரெட்டி நாகேஸ்வர ராவ், பரேஷ்பாய் ரத்வா, பி ராமகிருஷ்ண ரெட்டி, மங்கள காந்தி ராய், கே சி ரன்ரெம்சங்கி, வடிவேல் கோபால் & மாசி சடையன் (இரட்டை), மனோரஞ்சன் சாஹு, பட்டயத் சாஹு

ரித்விக் சன்யால், கோட்டா சச்சிதானந்த சாஸ்திரி, சங்குராத்திரி சந்திர சேகர், கே ஷனதோய்பா ஷர்மா, நெக்ரம் ஷர்மா, குர்சரண் சிங், லக்ஷ்மன் சிங், மோகன் சிங்

தூணோஜம் சாவோபா சிங், பிரகாஷ் சந்திர சூட், நேகினோ சோர்கி, டாக்டர். ஜானும் சிங் சோய், குஷோக் திக்சே நவாங் சம்பா ஸ்டான்சின், எஸ் சுப்பராமன்

மோவா சுபோங், பாலம் கல்யாண சுந்தரம், ரவீனா ரவி டாண்டன், விஸ்வநாத் பிரசாத் திவாரி, தனிராம் டோட்டோ, துலா ராம் உப்ரீதி, கோபால்சாமி வேலுச்சாமி

ஈஸ்வர் சந்தர் வர்மா, கோமி நாரிமன் வாடியா, கர்மா வாங்சு (மரணத்திற்குப் பின்), குலாம் முஹம்மது ஜாஸ்

ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story