டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x

டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story