பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்


பழம்பெரும்  நடிகை ஜமுனா காலமானார்
x

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார் ஐதராபாத்:

ஐதராபாத்,

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகை ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜமுனா. தங்கமலை ரகசியம் படத்தில் நடிகை ஜமுனா சிவாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு 1999ல் தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது.

நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நடிகை ஜமுனாவின் மறைவு, தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story