யாரும் எதுவும் சொல்லட்டும், நான் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்: சசி தரூர்


யாரும் எதுவும் சொல்லட்டும், நான் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்: சசி தரூர்
x

யாரும் எதுவும் சொல்லட்டும்..நான் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று சசி தரூர் தெரிவித்தார்.

கன்னூர்,

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் சமீப காலமாக மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் சசி தரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சசி தரூர் மாநில அரசியலில் கவனம் செலுத்தியிருப்பது கேரள காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரமேஷ் சென்னிதாலா உள்ளிட மூத்த தலைவர்கள் கூட சசி தரூரை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், " யாரும் எதுவும் சொல்லட்டும்..நான் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். கடந்த 14 ஆண்டுகளாக நான் என்ன செய்கிறனோ..அதையே தற்போதும் செய்து வருகிறேன். மக்களிடம் இருந்து அழைப்பு வரும் போது தனது வசதிக்கு ஏற்றவாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்" என்றார்.


Next Story