லிவ் இன் உறவு விவகாரம்... - சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை..!


லிவ் இன் உறவு விவகாரம்... - சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை..!
x

லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்கக் கோரிய பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்கக் கோரிய பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக அரியானாவை சேர்ந்த வக்கீல் மம்தா ராணி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், லிவ் இன் உறவில் இருப்பவர்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது லிவ் இன் உறவில் இருப்பவர்களின் சமூக பாதுகாப்பு கருத்தில் கொண்டு கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு இதில் மத்திய அரசின் பங்கு என்ன என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இது போன்ற அர்த்தமற்ற மனுவுக்கு, அபராதம் விதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


Next Story