கேரள சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம்


கேரள சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம்
x

மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, எதிர்கட்சிகள் அவையை புறக்கணித்தன.

திருவனந்தபுரம்,

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், நிர்வாக முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கேரளாவில் 'லோக் ஆயுக்தா' உருவாக்கப்பட்டது.

கேரளாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் முதல்-மந்திரி ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசு கொண்டு வந்த இந்த சட்டம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தங்களுடன் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, எதிர்கட்சிகள் அவையை புறக்கணித்தன. இந்த மசோதாவுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிப்பாரா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story