எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை மதியம் வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை மதியம் வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 11:58 AM IST (Updated: 2 Aug 2023 12:08 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத்தொடரின் 9-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதேவேளை, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென 60 நோட்டீஸ் கொடுக்கப்பட்டபோது சபாநாயகர் அனுமதிக்கவில்லை என கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story