ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம்- கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த்குமார்


ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம்-  கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த்குமார்
x

ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லோக் அயுக்தாவின் அதிகாரத்தை குறைத்து, ஊழல் தடுப்பு படை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்ததுடன், கர்நாடகத்தில் மீண்டும் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்குகள், அங்கு பணியாற்றும் போலீசாரை லோக் அயுக்தாவுக்கு மாற்றியும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, லோக் அயுக்தாவுக்கு கர்நாடக அரசும் முழு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் லோக் அயுக்தா கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் லோக் அயுக்தா போலீசில், ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், ஊழல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மக்கள் கொடுக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story