லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு


லாரி-மோட்டார் சைக்கிள்   மோதல்; 2 பேர் சாவு
x

லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

பெங்களூரு: துமகூரு தாலுகா சித்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சமன்தாசர் (வயது 55). கூலி தொழிலாளி. இவரது நண்பர் சிவண்ணா (50). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதியதால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதும் தெரியவந்தது.


Next Story