காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
தார்வாரில் ஒரே கயிற்றில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டன.
உப்பள்ளி-
தார்வாரில் ஒரே கயிற்றில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டன.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
தார்வார் (மாவட்டம்) தாலுகா கெப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மைலாரி கலால் (வயது 22). இவர் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் மைலாரியும் இளம்பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இவர்கள் 2 பேரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இளம்பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ெவளியேறினர். இதனால் அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
தற்கொலை
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் தார்வார் புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், மைலாரியையும் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மைலாரிக்கு சொந்தமான புதிய வீட்டில் ஒரே கயிற்றில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாா் நடத்திய விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மைலாரியும், இளம்பெண்ணும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து தார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.