திருமணம் முடிந்து மேடையிலேயே பலியான மணமகள்.. சம்பவத்தை மறைத்த உறவினர்கள்...! நடந்தது என்ன ?


திருமணம் முடிந்து மேடையிலேயே பலியான மணமகள்.. சம்பவத்தை மறைத்த உறவினர்கள்...! நடந்தது என்ன ?
x

மணப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் மணப்பெண் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

லக்னோ

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியில் உள்ள மஹிலாபாத் பாத்வனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சர்மா. இவரது மகள் ஷிவாங்கி சர்மா (வயது 21).இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து திருமண நாளும் வந்துள்ளது.

மணமகனும், மணமகளும் மாலைகளை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தபோது திடீரென மணப்பெண் ஷிவாங்கி சர்மா மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமண விழாவுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உறவினர்கள் மணப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் மணப்பெண் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் மணப்பெண்ணுக்கு இறுதி சடங்கு நடத்தியுள்ளனர்.

ஆனால், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த மரணம் குறித்து பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, சில நாட்களாக அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பின்னர் அது குணமாகிய நிலையில், திருமணம் ஏற்பாடுகள் நடந்தபோது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.


Next Story