பறவை மோதியதால் லக்னோ-கொல்கத்தா விமானம் அவசர தரையிறக்கம்


பறவை மோதியதால் லக்னோ-கொல்கத்தா  விமானம் அவசர தரையிறக்கம்
x

Image Courtesy : ANI 

தினத்தந்தி 29 Jan 2023 4:45 PM IST (Updated: 29 Jan 2023 4:51 PM IST)
t-max-icont-min-icon

விமான நிர்வாகம் இந்நிகழ்விற்காக மன்னிப்பும் கோரியுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது பறவை மோதி உள்ளது. இதையடுத்து அந்த விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஏர் ஆசியா விமானத்தில் பறவை மோதிய நிகழ்வால் லக்னௌ விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. விமான நிர்வாகம் இந்நிகழ்விற்காக மன்னிப்பும் கோரியுள்ளது.


Next Story