மத்திய பிரதேசம்; ஒரே இளம்பெண்ணை காதலித்த அண்ணன், தம்பி... அடுத்து நடந்த விபரீதம்...!!


மத்திய பிரதேசம்; ஒரே இளம்பெண்ணை காதலித்த அண்ணன், தம்பி... அடுத்து நடந்த விபரீதம்...!!
x

மத்திய பிரதேசத்தில் ஒரே இளம்பெண்ணை அண்ணன், தம்பி என சகோதரர்கள் இருவரும் காதலித்தது விபரீதத்தில் முடிந்து உள்ளது.

பாலாகாட்,

மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் லிங்மரா கிராமத்தில் ராம்பயாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தினி என்ற கிராமத்தில், வசித்து வருபவர் சிவசங்கர் (வயது 22).

இவரது இளைய சகோதரர் மசூம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதர் ஒன்றில் இருந்து போலீசார் உடல் ஒன்றை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது மசூமின் உடல் என தெரிய வந்தது.

தொடர்ந்து சிவசங்கரை பிடித்து போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சகோதரர்கள் இருவரும் வேலைக்காக மராட்டியத்தின் நாக்பூர் நகருக்கு சென்று உள்ளனர்.

வேலைக்கு சென்ற இடத்தில், மசூமுக்கு இளம்பெண் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு உள்ளது. அந்த இளம்பெண்ணும் அதே இடத்தில் பணிபுரிந்ததுடன் மசூம் மீது காதல் கொண்டு உள்ளார்.

ஆனால், அந்த இளம்பெண் மீது சிவசங்கரும் காதல் வசப்பட்டு உள்ளார். இது சகோதரர்களுக்கு இடையே மோதலாக மாறி உள்ளது. ஆனால், மசூமும் அந்த இளம்பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசி வந்து உள்ளனர்.

இது சிவசங்கருக்கு பிடிக்கவில்லை. இவர்களது சந்திப்பால் சிவசங்கர் ஆத்திரம் அடைந்து உள்ளார். அண்ணன் அந்த இளம்பெண் மீது காதல் கொண்டபோதும், அந்த இளம்பெண்ணோ அவரது இளைய சகோதரரை விரும்பியுள்ளார். அண்ணனின் காதல் ஒரு தலை காதலாக இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி சகோதரர்கள் இருவரும் நாக்பூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் வராசியோனி பகுதிக்கு வந்தபோது, சகோதரர் மசூமுக்கு சிவசங்கர் நிறைய மது ஊற்றி கொடுத்து உள்ளார். இதன்பின்னர் இருவரும் மீண்டும் கிராமத்திற்கு புறப்பட்டனர்.

அவர்கள் நடந்து சென்றபோது, இளம்பெண் விவகாரம் பற்றி பேசியுள்ளனர். இதில், ஆத்திரத்தில் இருந்த சிவசங்கர் மறைத்து வைத்திருந்த சுத்தியல் ஒன்றால் மசூம் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே மசூம் உயிரிழந்து விட்டார்.

இதன்பின் மசூமின் உடலை புதர் ஒன்றில் மறைத்து வைத்து விட்டு, சிவசங்கர் தப்பி சென்று உள்ளார். திட்டமிட்டே சிவசங்கர் இதனை நடத்தியது தெரிய வந்து உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளனர்.


Next Story