காதல் விவகாரம்: பெண் போலீசை சுட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை


காதல் விவகாரம்: பெண் போலீசை சுட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை
x

மத்திய பிரதேசம், இந்தூரில் காதல் விவகாரத்தில், பெண் போலீசை சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இன்ஸ்பெக்டா் தற்கொலை செய்து கொண்டாா்.

போபால்,

மத்தியபிரதேசம், போபால் ஷியாமலா ஹில்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஹகம் சிங் பன்வார் என்பவா் பணியாற்றி வருகிறாா்.

இவா் இந்தூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவரை சந்திக்க சென்றாா். இருவரும் அங்குள்ள சிற்றுண்டி உணவகத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் ஹகம் சிங் பன்வார் தனது துப்பாக்கியால் பெண் போலீசை சுட்டாா். அதன்பின், ஹகம் சிங் பன்வார் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஹகம் சிங் பன்வார் சுட்டதில் பெண் போலீசுக்கு காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸ் கமிஷ்னா் கூறுகையில், இன்ஸ்பெக்டர் ஹகம் சிங் பன்வார் மற்றும் பெண் போலீசுக்கும் இடையே காதல் விவகாரம் தொடா்பாக தகராறு இருந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தொியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸ் உயரதிகாாிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story