பழங்குடியின சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் - மத்திய பிரதேச துணை பிரிவு நீதிபதி கைது


பழங்குடியின சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் - மத்திய பிரதேச துணை பிரிவு நீதிபதி கைது
x

பழங்குடியின சிறுமிகளை மீது பாலியல் துன்புறுத்தல் செய்த மத்திய பிரதேச துணை பிரிவு நீதிபதி கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசம்,

மத்திய பிரதேசதில் துணை பிரிவு நீதிபதியாக பணி புரிந்தவர் சுனில் குமார் ஜா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிமை மாவட்ட தலைநகரில் இருக்கும் பெண்கள் விடுதி முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றார். அங்கு அவர் பழங்குடியின சிறுமிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.

அவர்களை தொட்டு துன்புறுத்தி, ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதையடுத்து ஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் உறுதி செய்யப்பட்டு அவர் மேல் பாலியல் துன்புறுத்தல், போக்சோ ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு சிறப்பு நீதிபதி ஆர்.கே. ஷர்மா நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார்.

குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜாவை பணியிடை நீக்கம் செய்து, ஜபூவா மாவட்ட கலெக்டர் தன்வி ஹீடா மற்றும் இந்தூர் டிவிஷனல் கமிஷ்னர் பவன்குமார் ஷர்மா ஆகியோர் உத்தரவிட்டனர்.

அவர் வேலையில் கவனமின்றி செயல்பட்டதற்காககவும், தனது பணியில் அலட்சியமாக இருந்தது ஆகிய காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story