மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 50 சதவீதம் சரிந்தது


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 50 சதவீதம் சரிந்தது
x

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைந்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மராட்டியத்தில் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்தது வந்தது . இந்த நிலையில், தொற்று பாதிப்பு இன்று 1,515- ஆக குறைந்துள்ளது.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 86 ஆயிரத்து 811- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியத்தில் நேற்று 2,962- பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு 3 ஆக குறைந்துள்ளது.

தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு 431 ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 2,062- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21,935 ஆக உள்ளது. மும்பையில் அதிகபட்சமாக 7,040- பேரும், புனேவில் 5,221 பேரும் , தானே மாவட்டத்தில் 4,605- பேரும் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story