பன்சாத் சரணாலயத்தில் கழுகுகளுக்கான `உணவு மையம்' திறப்பு! அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க புதிய முயற்சி


பன்சாத் சரணாலயத்தில் கழுகுகளுக்கான `உணவு மையம் திறப்பு! அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க புதிய முயற்சி
x

அழிந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க, பன்சாத் வனவிலங்கு சரணாலயத்தில் `உணவு மையம்' அமைக்கப்படுகிறது.

அலிபாக்,

மராட்டிய மாநிலம் கடலோர பகுதியான ராய்காட் மாவட்டத்தில் கழுகுகளுக்காக `உணவு மையம்' அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் அழிந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க, பன்சாத் வனவிலங்கு சரணாலயத்தில் `உணவு மையம்' அமைக்கப்படுகிறது.

மும்பையில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள பன்சாத் சரணாலயம் ஏறக்குறைய 7,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம், 160க்கும் மேற்பட்ட 160க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 30 வகையான ஊர்வன மற்றும் 17 வகையான பாலூட்டிகளுக்கு இருப்பிடமாக உள்ளது.

பன்சாத் சரணாலயத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை 30க்கும் மேற்பட்ட கழுகுகள் இருந்தன. ஆனால் பெரும்பாலான பறவைகள் உணவுப் பற்றாக்குறையால் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன.

இதனையடுத்து சரணாலயம் மேற்கொண்ட கழுகு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீன் ஒர்க்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பானது, அங்கு உணவு மையத்தை அமைக்க முடிவு செய்தது. அப்பகுதியில் ஏதேனும் கால்நடைகள் இறந்தால் சரணாலயத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு அப்பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதன்பின் கால்நடைகள் இறந்த பின், கிரீன் ஒர்க்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் அந்த விலங்கின் சடலத்தை புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவு மையத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இதன்மூலம் அங்கு சுற்றித்திரியும் கழுகுகள் அவற்றை உண்ண மீண்டும் அங்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story