மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று அதிகரித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,975- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 68 ஆயிரத்து 218- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டியத்தில் நேற்று 1,877- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 871- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பரவல் விகிதம் 1.83 சதவிகிதமாக உள்ளது.
Related Tags :
Next Story