மும்பையில் 1,803- பேருக்கு கொரோனா


மும்பையில் 1,803- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jun 2022 7:14 PM IST (Updated: 12 Jun 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் மும்பையில் மட்டும் 1,803- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், மராட்டியத்திலும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று அம்மாநிலத்தில் ஒருநாள் பாதிப்பு 2,922 ஆக பதிவான நிலையில் இன்று தொற்று பாதிப்பு 2,946- ஆக உயர்ந்துள்ளது. மாநிலத் தலைநகர் மும்பையில் மட்டும் 1,803- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,432- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிகை 77 லட்சத்து 46 ஆயிரத்து 337- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 97.92 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 42,922- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


Next Story