மராட்டியம்: விமான நிலையத்தில் மின்னல் தாக்கியதில் 2 என்ஜினீயர்கள் காயம்


மராட்டியம்:  விமான நிலையத்தில் மின்னல் தாக்கியதில் 2 என்ஜினீயர்கள் காயம்
x

மராட்டியத்தில் நாக்பூர் விமான நிலையத்தில் மின்னல் தாக்கியதில் 2 இளம் என்ஜினீயர்கள் காயம் அடைந்து உள்ளனர்.



நாக்பூர்,



மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பருவகாலத்தில் பொழிய கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வருகிற 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் தொடர் கனமழை இருக்கும் என்றும் கணிப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்து விமான நிலையத்தின் 28 மற்றும் 33 வயதுடைய 2 இளம் என்ஜினீயர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.


Next Story