"பெண் எம்.பி., சமைக்க போகலாம்" சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாஜக தலைவர்


பெண் எம்.பி., சமைக்க போகலாம்  சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாஜக தலைவர்
x

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே குறித்து “ வீட்டிற்கு சமைக்க செல்லுங்க” எனப்பேசியதற்கு மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே குறித்து " வீட்டிற்கு சமைக்க செல்லுங்க" எனப்பேசியதற்கு மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த தகவலை மராட்டிய மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சந்திரகாந்த் பட்டீல் தனது கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், சந்திரகாந்த் பட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் எம்.பி சுப்ரியா சுலே, மன்னிப்பு கோரியதன் மூலம் சந்திரகாந்த் பட்டீல் தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திரகாந்த் பட்டீலின் சர்ச்சை பேச்சு

முன்னதாக கடந்த புதன் கிழமை பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கோரி பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய சந்திரகாந்த் பட்டீல், "சுப்ரியா சுலே ஏன் அரசியலில் இருக்கிறார் என தெரியவில்லை. எம்.பியாக இருந்தும் கூட ஒரு முதல் மந்திரியிடம் நேர ஒதுக்கி பெற முடியவில்லை.

அரசியல் புரியவில்லை என்றால், வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டியது தானே. நீங்கள் டெல்லி அல்லது கல்லறைக்கு கூட செல்லுங்கள். எங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தாருங்கள்" எனப் பேசியிருந்தார்.


Next Story