சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு தான் கிடைக்கும்- பட்னாவிஸ் நம்பிக்கை


சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு தான் கிடைக்கும்- பட்னாவிஸ் நம்பிக்கை
x

வில், அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டேக்கு தான் கிடைக்கும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளாக உடைந்து உள்ளது. இதில் வில் அம்பு சின்னம் எங்களுக்கு தான் சொந்தம் என இரு அணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன. எனவே இருதரப்பினரை தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் வில், அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டேக்கு தான் கிடைக்கும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " ஏக்நாத் ஷிண்டே அணியில் தான் பெரும்பான்மையான சிவசேனா மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். எனவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு சாதகமாக தான் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என நம்புகிறேன். " என்றார்


Next Story