மத்திய மந்திரி அமித்ஷா உடன் மராட்டிய முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி சந்திப்பு


மத்திய மந்திரி அமித்ஷா உடன் மராட்டிய முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி சந்திப்பு
x

Image Courtesy: ANI

மத்திய மந்திரி அமித்ஷாவை மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சந்தித்தனர்.

புதுடெல்லி,

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், மராட்டிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்திக்க உள்ளனர்.


Next Story