நைட் கிளப் முன்பு உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட பெண் -வைரலாகும் வீடியோ


நைட் கிளப் முன்பு உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட பெண் -வைரலாகும் வீடியோ
x

நாக்பூரில் இளம்பெண் ஒருவர் நைட் கிளப் முன்பு ரகளையில் ஈடுபட்டு தனது ஆடையைக் கழற்றப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாக்பூர்

நாக்பூர் வார்தா சாலையில் செயல்படும் நைட் கிளப் ஒன்றுக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தார். ஆனால், ஏற்கெனவே கிளப்புக்குள் வருவதற்கான நேரம் முடிந்திருந்ததால் புதிய உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என்று பாதுகாப்புக்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதை அந்தப் பெண் ஏற்கத் தயாராக இல்லை. அதனால் பாதுகாப்பாளர்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிளப் பெண் காவலர்களும் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். `என்னை உள்ளே விடவில்லையெனில் கிளப் முன்பு ஆடைகளைக் கழற்றுவேன்' என்று கூறி மேலாடை மற்றும் ஸ்கர்ட்டை கழற்றினார்.

கிளப் முன்பு உள்ளாடையுடன் நின்றுகொண்டு பவுன்சர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அதோடு கிளப்புக்கு வந்தவர்களிடம் தனது மொபைல் நம்பரையும் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இது குறித்து கிளப் உரிமையாளர் கரன் தக்கர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார்.

அந்தப் பெண்ணிடம் விசாரிக்க போலீசார் அவரைத் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் செய்த ரகளையால் கிளப் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

கிளப்புக்கு வெளியில் நடந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
Next Story