மராட்டியத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
x

Image Courtesy : ANI 

கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் அதிகப்பட்ச ஒருநாள் பாதிப்பு நேற்று பதிவானது.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் 4,255 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் அதிகப்பட்ச ஒருநாள் பாதிப்பு நேற்று பதிவானது.

நேற்று முன்தினம் 4 ஆயிரத்தை கடந்து 4,024 ஆக பதிவாகி இருந்த பாதிப்பு இன்று 3-வது நாளாக 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் 4 ஆயிரத்து 165 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 3 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் 21,749 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் மும்பையில் மட்டும் 13,304 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,047- பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Next Story