மராட்டியத்தில் மேலும் 781- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் மேலும் 781- பேருக்கு கொரோனா
x

மராட்டியத்தில் மேலும் 781- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி, மராட்டியத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781- ஆகும். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 லட்சத்து 01 ஆயிரத்து 119- ஆகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 251 ஆகவும் அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் நேற்று 1,600- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக இருந்தது.


Next Story