மராட்டியத்தில் சாலையோர ஓட்டலுக்குள் டிரக் புகுந்து விபத்து: 10 பேர் பலி


மராட்டியத்தில் சாலையோர ஓட்டலுக்குள் டிரக் புகுந்து விபத்து: 10 பேர் பலி
x

மராட்டிய மாநிலத்தில் சாலையோர ஓட்டலுக்குள் டிரக் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர் விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சாலையோர ஓட்டலுக்குள் டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. துலேவில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த டிரக்கின் பிரேக் ஃபெயிலியர் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் எதிரே வந்து கொண்டிருந்த கார், மற்றும் மோட்டார் சைக்கிளில் மோது ஓட்டலுக்குள் புகுந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். இருபதற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story