அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயர் : மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு


அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயர் : மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு
x

கோப்புப்படம்

அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயரை சூட்ட உள்ளதாக மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மும்பை,

அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மராட்டியப் பேரரசின் பரம்பரை அரசியாக இருந்த அகமத்நகர் மாவட்டம் சோண்டி கிராமத்தில் பிறந்த அஹில்யாபாய் ஹோல்கருக்கு அஹில்யா நகர் அர்ப்பணிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் ராணியின் 298 வது பிறந்தநாளான அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தி தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸ், அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பாஜக எம்எல்ஏ கோபிசந்த் பதல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மராட்டிய மாநிலத்தின் அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத் நகரங்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என அரசாங்கம் பெயர் மாற்றியதை அடுத்து, பிப்ரவரி முதல் அகமதுநகர் மாவட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story