காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்! மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டி..?


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்! மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டி..?
x

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் (75), தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார். திக்விஜய சிங் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள சசி தரூர் இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி23 குழுவை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில்,புதிய திருப்பமாக, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், சசி தரூர் இடையே மும்முனை போட்டி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஜி23 குழுவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரியும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Next Story