'மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிடப்பட்டது' - பா.ஜ.க விமர்சனம்


மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிடப்பட்டது - பா.ஜ.க விமர்சனம்
x

மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது என பா.ஜ.க விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி முதல்-மந்திரிகள் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது என்றும், தனது பேச்சு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிடப்பட்டது என பா.ஜ.க விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தது திட்டமிட்டு கேமராக்களுக்காக நடத்தப்பட்டது. ஒரு முதல்-மந்திரி, தீவிரமான ஆட்சிப் பிரச்சினைகளை நாடகத்தனமாக மாற்றுவது வருத்தமளிக்கிறது. அவரது மோதல் அரசியலின் விளைவாக மேற்கு வங்காள மக்கள் அவதிப்படுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story