மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம்


மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம்
x

மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் டார்ஜிலிங் மாவட்டம் பஹ்டொக்ராவில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் மூலம் இன்று மதியம் ஜல்பைஹுரிக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்போது கனமழை பெய்ததுடன் மோசமான வானிலையும் நிலவியது. இதன் காரணமாக மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் ஷலுஹராவில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.


Next Story