பிரதமர் மோடியை சந்திக்க மம்தா பானர்ஜி திட்டம்?


பிரதமர் மோடியை சந்திக்க மம்தா பானர்ஜி திட்டம்?
x

டெல்லியில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி மாநில முதல் மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.

கொல்கத்தா,

மாநில முதல் மந்திரிகள் கூட்டம் டெல்லியில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை வழங்குமாறு மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என்று தெரிகிறது. அதேபோல் பராக்கா அணைப்பகுதிகளில் கங்கை ஆற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வருவார் என்று தெரிகிறது. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story