வரதட்சணை கொடுமை புகார்: மனைவியின் சமாதி அருகே மறுநாளே கணவன் தூக்கிட்டு தற்கொலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மறுநாளே கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பிஹனீர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். இவரது மனைவி ரஞ்சனா. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ரஞ்சனாவின் உடல் அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாலேயே ரஞ்சனா தற்கொலை செய்துகொண்டதாகவும் கணவன் சந்திரபிகாஷ் தான் தற்கொலைக்கு காரணம் என்றும் ரஞ்சனாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மனைவி ரஞ்சனா சமாதி அருகே உள்ள மரத்தில் கணவன் சந்திரபிரகாஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் திங்கட்கிழமை மனைவியின் சமாதி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தொடர்பாக ரஞ்சனாவின் உறவினர்கள் மீது சந்திரபிரகாஷின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.