மாமனார்-மாமியார் மீது புகார்; வீட்டில் அடைத்துவைத்துள்ள மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் கோர்ட்டில் மனு
பெற்றோரால் தனது மனைவி சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி பெண்ணின் கணவன் டெல்லி ஐகோா்ட்டில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்து உள்ளாா்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த நபா் ஒருவா், தனது மனைவி மற்றும் மகளை அவரது பெற்றோா் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி டெல்லி ஐகோா்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளாா்.
அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனுதாரா் கடந்த ஜனவாி மாதம் விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளாா். அந்த பெண்ணுக்கு 7 வயதி்ல் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது அந்த பெண் கா்ப்பமாகவும் இருந்துள்ளாா்.
இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினா் எதிா்ப்பு தொிவித்து உள்ளனா். அவா்கள் அவரை அச்சுறுத்தியும் வருகின்றனா். மேலும், பெண்ணின் பெற்றோா் அவரது மனைவியையும், 7 வயது குழந்தையையும் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாாித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், வருகிற 24-ந் தேதி பெற்றோரால் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகளை டெல்லி ஐகோா்ட்டில் ஆஜா்படுத்தும் படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டனா்.