திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது


திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது
x

திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அலிபிரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக போலி மிரட்டல் விடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் நேற்று திருப்பதியில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக சேலத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 39) என்ற நபர் கடந்த 15-ந்தேதி காலை 11.25 மணியளவில் அலிபிரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மாலை 3 மணிக்கு அலிபிரியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறினார்.

மேலும் குண்டு வெடித்தால் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறக்கக்கூடும் என்று கூறினார். இந்த அழைப்பைத் தொடர்ந்து அலிபிரி செக்போஸ்ட்டில் முழுமையான சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story