இன்ஸ்டாவில் பழக்கம்: பேச மறுத்த சிறுமி பெயரில் போலி கணக்கு தொடங்கி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட இளைஞர்
இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 22) தலைநகர் டெல்லியில் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் டெல்லியின் ஷாத்ரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவரும் இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக பேசி வந்த நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அருணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராமில் இருந்து அருணின் கணக்கை முடக்கிய சிறுமி அவரின் செல்போன் நம்பரையும் பிளாக் செய்துள்ளார்.
சிறுமி தன்னிடம் பேசாததாலும் தன் நம்பரை பிளாக் செய்ததாலும் ஆத்திரமடைந்த அருண்குமார், சிறுமியின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கியுள்ளார். மேலும், அந்த சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியுள்ளார். மேலும், சிறுமியின் செல்போன் எண்ணையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தனது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு தன் பெயரிலான போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டதை அறிந்த சிறுமி அதிர்ச்சியடைந்தனார். பின்னர் இது குறித்து சிறுமி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேச மறுத்த சிறுமியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து செல்போன் நம்பருடன் பதிவிட்ட அருண்குமாரை கைது செய்தனர்.