சத்தீஸ்கர்: ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் - சிறை கைதி மீது வழக்குப்பதிவு


சத்தீஸ்கர்: ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் - சிறை கைதி மீது வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

சத்தீஸ்கரில் ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் விடுத்த சிறை கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்கார்,

சத்தீஸ்கரின் ராய்கார் பகுதியில் பிரபல உருக்கு ஆலை நிறுவனமான ஜிண்டால் ஸ்டீல் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் ஜிண்டாலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "ரூ.50 கோடி தர வேண்டும். 48 மணி நேரத்துக்குள் பணம் தராவிட்டால்..." என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யாரென்று விசாரணையில் இறங்கினர். அப்போது பிலாஸ்பூர் மத்திய சிறையில் இருந்து ஒரு கைதி அந்த கடிதத்தை அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதி மீது, கொலைமிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story