கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
x

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபருக்கு 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபர், கடந்த 2018-ம் ஆண்டு 3-ம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோழிக்கோடு போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சுரேஷ் மீதான குற்றத்தை உறுதி செய்து அவருக்கு மொத்தம் 83 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story