காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை


காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை
x

உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூர்,

உத்தர பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

தலிப் என்ற இளைஞர் தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான தைபாவை காதலித்து வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தலிப் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தைபாவின் நெற்றியில் சுட்டார். பின்னர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் செல்போன்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story