மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வேனில் இறைச்சிக்காக கடத்திய மாடுகள் மீட்பு கேரளாவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது


மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வேனில் இறைச்சிக்காக கடத்திய மாடுகள் மீட்பு கேரளாவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வேனில் இறைச்சிக்காக கடத்திய மாடுகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வேனில் இறைச்சிக்காக கடத்திய மாடுகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளத்தில் சிக்கிய சரக்கு வேன்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட அம்பலமொகரு பகுதியில் சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு வேன் அலேகாலா பகுதியில் சென்றபோது, ஒரு பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் சரக்கு வேனில் இருந்த 4 பேரில் 3 பேர் கீழே இறங்கி வேனை தள்ளினர். ஆனால் அவர்களால் பள்ளத்தில் இருந்து சரக்கு வேனை மீட்க முடியவில்லை.

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து, அவர்களுக்கு உதவினர். அப்போது சரக்கு வேன் தார்பாயால் மூடப்பட்டிருந்தது.

இறைச்சிக்காக கடத்தல்

இதனால் பொதுமக்கள் தார்பாயை விலக்கி பார்த்தபோது, சரக்கு வேனில் மாடுகள் இருந்தது. இதுபற்றி 4 பேரிடமும் அவர்கள் கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் சரக்கு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் உல்லால் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, சரக்கு வேனையும், மாடுகளையும் மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள், 4 பேரும் மங்களூருவில் இருந்து இறைச்சிக்கு வெட்ட மாடுகளை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த நிலையில் நேற்று அந்த 4 பேரையும் உல்லால் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கேரளா மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த காலித், உல்லாலை சேர்ந்த அகமது இர்ஷாத், ஜாபர் சாதிக், பயாஸ் என்பது தெரியவந்தது. கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story