மங்களூருவில் செல்போன் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்


மங்களூருவில் செல்போன் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் செல்போன் பார்த்தபடி தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மங்களூரு:-

செல்போன் பார்த்தபடி....

மங்களூரு நகரில் ஸ்டேட் பாங்க் பஸ் நிலையத்தில் இருந்து தலப்பாடி இடையே தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் எப்போதும் கூட்டநெரிசலுடன்தான் காணப்படும். இந்த வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்று கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தின் வழியாக இயக்கப்பட்ட பஸ்சில் டிரைவர் ஒருவர் செல்போனை பார்த்தபடி வாகனத்தை ஓட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. அதாவது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் டிரைவராக அந்தாணி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக பஸ்சில் ஏறிய பின்னர்தான் செல்போன் பேசுவார் என்று கூறப்படுகிறது. அல்லது செல்போனில் வீடியோ ஏதாவது ஒன்றை பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டுவதை வழக்கமாக கொண்டாடிருந்தார்.

வீடியோ வைரல்

இந்தநிலையில் சம்பவத்தன்று நேத்ராவதி பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ெசல்போனை பார்த்தப்படி வாகனத்தை ஓட்டியவர், அதன் பின்னர் கீழே வைக்கவில்லை. ஏற்கனவே நேத்ராவதி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் இவர் செல்போன் பார்த்தபடி ஓட்டியது, பயணிகளை பீதியடைய செய்தது.

இதனால் கோபமடைந்த பயணிகள் சிலர், அவரது நடவடிக்கை அம்பலப்படுத்தும் நோக்கில், செல்போனில் படம் பிடித்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தனியார் பஸ்சின் வழித்தட உரிமை மற்றும் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பயணிகள், கோரிக்கை வைத்திருந்தனர். இந்தநிலையில் தனியார் பஸ் டிரைவர் செல்போனை பார்த்தபடி வாகனத்தை ஓட்டிய வீடியோ மங்களூரு நகர போலீசாரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கு பதிவு

இதுகுறித்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்ெபக்டர் ரமேஷ் கூறுகையில், தலப்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த தனியார் பஸ் டிரைவர் செல்போன் பார்த்தபடி வாகனத்தை ஓட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் பஸ்சிற்கு தலப்பாடி வழியாக இயக்கப்படும் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். இந்த நடவடிக்கை பிற பஸ் டிரைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றார்.


Next Story