மணிப்பூர்: போலி வீடியோவால் பெண்கள் பலாத்காரம்... டீன்-ஏஜ் சகோதரர் அடித்து கொலை; அதிர்ச்சி தகவல்


மணிப்பூர்:  போலி வீடியோவால் பெண்கள் பலாத்காரம்... டீன்-ஏஜ் சகோதரர் அடித்து கொலை; அதிர்ச்சி தகவல்
x

மணிப்பூரில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் ஒருவரின் டீன்-ஏஜ் சகோதரர் அடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் தெரிய வந்து உள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. இந்த பலாத்கார சம்பவம், போலியான வீடியோ ஒன்றால் நடந்து உள்ளது என கூறப்படுகிறது. அதில், தங்களது சமூக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என்ற வதந்தி பரவியதும் ஒரு கும்பல் கிராமத்திற்குள் புகுந்து மற்றொரு குழுவை விரட்டி உள்ளது.

அந்த குழுவில் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் 56 வயது முதியவர், 19 வயது மகன் மற்றும் 21 வயது மகள் என ஒரே குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் இருந்தனர்.

அவர்களுடன் இருந்த மற்ற 2 பேர், 42 மற்றும் 52 வயதுடைய பெண்கள் ஆவர். இந்த குழு, தாக்குதல் நடத்த வந்த கும்பலிடம் இருந்து தப்புவதற்காக வன பகுதிக்குள் ஓடியுள்ளது.

வழியில் போலீசார் குழு ஒன்றை அவர்கள் கண்டனர். போலீசாருடன் சென்ற அவர்களை 800 முதல் ஆயிரம் பேர் கொண்ட அந்த கும்பல் தனியாக பிரித்து, இழுத்து சென்று உள்ளது.

அந்த கும்பலிடம் இருந்து 21 வயது சகோதரியை பாதுகாக்க முயன்ற 19 வயது சகோதரனை அந்த கும்பல், சம்பவ பகுதியிலேயே கொலை செய்து உள்ளது. இதன்பின்னரே, அந்த கும்பலால் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கடந்த மே 3-ந்தேதியில் இருந்து மணிப்பூரில் இணையதளம் சஸ்பெண்டான நிலையில், இந்த பலாத்கார வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போலியான வீடியோ ஒன்றால், வதந்தி பரவியதில் இந்த பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நடந்து உள்ளது என தெரிய வந்து உள்ளது.


Next Story