மணிப்பூர் இணையதள சேவை துண்டிப்பு குறித்த வழக்கு நாளை ஒத்திவைப்பு..!


மணிப்பூர் இணையதள சேவை துண்டிப்பு குறித்த வழக்கு நாளை ஒத்திவைப்பு..!
x

மணிப்பூரில் இணையதள சேவை துண்டிப்பு குறித்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்ததுள்ளது.

மணிப்பூர்,

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் மணிப்பூரில் ஜூலை 5 ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை அடுத்து, கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த இணையதள சேவை தடைக்கு எதிராக ஐக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இணையதள சேவை தடையை திரும்பப் பெறக்கோரி உத்தரவிட்டனர். ஐக்கோர்டின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கிற்கான விசாரனையை நாளைக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story