மணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு


மணிப்பூர் நிலச்சரிவு -    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
x

27 ராணுவ வீரர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மாயமான 20 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story