மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது வளர்ச்சி தடைபட்டது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி


மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது  வளர்ச்சி தடைபட்டது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி
x

மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அசாதாரண திறன் படைத்தவர். ஆனால், அவர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டது என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிலையத்தில் இளம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி உரையாற்றினார். அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து போயிருந்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அசாதாரண திறன் படைத்தவர். ஆனால், அவர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டது. முடிவுகளை எடுப்பதில் தாமதம் நிலவியது. இப்போது இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கிறது.

1991-ல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் உள்ள திட்டங்கள்தான் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தியுள்ளது" என்றார்.

1 More update

Next Story