திருமணமான பெண் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


திருமணமான பெண் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x

கதக்கில் திருமணமான பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதக்:-

கதக் மாவட்டம் சாய்நகர் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ். இவருக்கும், ஹசினா என்ற பெண்ணுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இம்தியாஸ் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இதற்கிடையே ஹசினா மற்றும் இம்தியாஸ் குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்கள் ஹசினாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஹசினா வீட்டில் மயங்கி விழுந்தது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத உயிரிழப்பு என்று கூறப்பட்டது. இதையடுத்து இறுதிச்சடங்கு நடைபெற்றபோது, உறவினர்கள், ஹசினாவை குளிப்பாட்டினர். அப்போது ஹசினாவின் உடலில் காயங்கள் இருந்தது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஹசினாவின் பெற்றோர், இம்தியாசின் குடும்பத்தினர் தங்கள் மகளின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொலையான என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story