பள்ளி-கல்லூரிகள், நிறுவனங்களில் முககவசம் கட்டாயம்- கர்நாடக அரசு புதிய வழிகாட்டுதல்


பள்ளி-கல்லூரிகள், நிறுவனங்களில் முககவசம் கட்டாயம்-  கர்நாடக அரசு புதிய வழிகாட்டுதல்
x

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டாயம் முககவசம்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையொட்டி பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற வேண்டும். கதவுகள் மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பள்ளி-கல்லூரி உள்பட கல்வி நிலையங்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வருகை தருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

கொரோனா பரிசோதனை

சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

சளி-காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story